திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் "சர்வதேச ஆட்டிச தினத்தை முன்னிட்டு உறுதிமொழியேற்பு" நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியராத்தில் சர்வதேச ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு இன்று (4.4.2022) மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுதலைமையில் ஆட்டிசக் குழந்தைகளின் வாழ்வின் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த இயன்ற முயற்சிகளை செய்வோம்"சர்வதேச ஆட்டிசம் தினந்தை கொண்டாட வந்திருக்கும் நாம் ஆட்டிாம் தினத்திற்கான காரணம், அதன் பல்வேறு அம்சங்கள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்த விழிப்புணர்வை. பொது மக்களிடையே ஏற்படுத்துவோம் அவர்களின் தனிப்பட்ட திறனனயும், மறைந்திருக்கும். ஆற்றலையும் வளர்ந்து சமூகத்திற்கு முன்பு வெளிப்படுத்துவோம்.
அவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தி, சமுதாயத்தில் ஓர் உள்ளடங்கிய நிலையினை ஏற்படுத்த பாடுபடுவோம், அந்தோடு ஆட்டிசம் நபர்களுக்கு சம வாய்ப்புகள், சம பங்கேற்பு மற்றும் உரிமைகள் பெற்றுத்தர சம பெற்றுத்தர நொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டிசம் குழந்தைகள் வாழ்வின் அடையாள குறியீட்டை வலியுறுத்தும் நிறமான நீல நிற பலூன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பறக்க விட்டார்.
இந்திகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் எஸ்.சந்திரமோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர்எஸ்.சாந்தகுமார் மற்றும் இந்திய குழந்தைகள் நல குழுமத்தினர். சிறப்புப் பள்ளிகளில் பயிலும்குழந்தைகள், சிறப்பாசிரியர்கள், பெற்றேர்கள். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO