திருச்சி மாவட்டத்தில் இயங்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் இயங்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு

திருச்சி E.B. ரோட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

மீண்டும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளேன். கடந்த முறை இந்தியாவில் மொத்தம் 237 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.,

தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை தேர்ந்தெடுத்து அங்கிருந்து வரப்படும் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம்.

குறிப்பாக மாசி என்ற செயலி மூலம் கூர்நோக்கு இல்லங்கள் உட்பட அனைத்திற்கும் வந்து சென்றவர்கள் குறித்தும் அதன் நிலை புகார் குறித்தும் தெரிந்து கொள்கிறோம். இதனை கண்காணிக்க டெல்லியில் ஒரு குழு செயல்படுகிறது.

தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கி இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

திருச்சி கூர்நோக்கு இல்லம் சிறப்பாக செயல்படுகிறது இங்கு மனநல ஆலோசகர் இருக்கிறார் இடப்பற்றாக்குறை மட்டும் உள்ளது. அதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு அறவே இல்லை.குழந்தை திருமணம், போக்சோ சட்ட வழக்கு பதிவு உள்ளிட்டவை விழிப்புணர்வு அதிகம் உள்ள இடங்களிலேயே அதிகமாக பதிவாகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு இது குறித்து அதிகம் இருக்கும் இடங்களில் தான் மக்கள் புகார் அளிக்க முன் வருகின்றனர்.விழிப்புணர்வு இல்லாத இடங்களில் வழக்குகள் பதிவாவது குறைவாகவே உள்ளது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn