4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11)  திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

இநிலையில் கடந்த 4ம் தேதி காலை சர்க்கார்பாளையம் பகுதியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தபோது அதை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவன் பனையக்குறிச்சி உதவி காவல் மையம் அருகே நின்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இரவு வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் சிறுவனை பல இடங்களில் தேடியும்  கிடைக்காததால் உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் காணாமல் போன ஆறாம் வகுப்பு மாணவன் சரவணனை திருவெறும்பூர் போலீசார் தேடி வந்த நிலையில்.

 இன்று காலை கீழமுல்லக்குடி காவிரி ஆற்றில் ஒரு சிறுவனின் பிரேதம் கடப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திருவரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் திருவெறும்பூர் போலீசார் பெற்றோரை அழைத்து காண்பித்தபோது அது தங்கள் மகன் தான் என அடையாளம் காட்டினர்.

இந்நிலையில் தடயவியல் துறை அதிகாரி பரிசோதனை இது இயற்கை மரணம் தான் என சான்றளித்தார்.

அதன் பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு சிறுவன் நான்கு நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைத்தது கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.