திருச்சியில் 800 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சியில் 800 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ்பாபு அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் அப்பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வீட்டை சோதனையிட்டனர். அப்போது பூட்டி கிடந்தது பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 825 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டில் உரிமையாளர் பர்வீன் என்பதும் அவர் அந்த இடத்தை யாருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார் என்பதை குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.