திருச்சியில் 2 நாட்களில் 5 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் பறிமுதல் - 11 பேரிடம் தொடர் விசாரணை

திருச்சியில் 2 நாட்களில் 5 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் பறிமுதல் - 11 பேரிடம் தொடர் விசாரணை

இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஐந்து பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நம்பிராஜன், சிவகங்கையை சேர்ந்த பழனிச்சாமி, பெரம்பலூரைச் சேர்ந்த ஆறுமுகம்,  நாகராஜன், புதுக்கோட்டையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் ஆகிய 5 பேரிடம் இருந்து 5 கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

2 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 380 ரூபாய் இதன் மதிப்பு என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த 6 பயணிகளிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம் கடத்தி வந்த 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இரண்டு நாட்களில் 5 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF