திருச்சியில் அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் தர்ணா

திருச்சியில் அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் தர்ணா

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்) தனியாருக்கு சாதகமாக உள்ளதை புறக்கணிக்க வேண்டும்.                            ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற்று அகவிலைப்படி உயர்வு அளித்திட வேண்டும் .போனஸ் தொகையை உரிய   கணகீட்டின்படி  நிலுவை தொகையை  வழங்கிட வேண்டும்.  மிகைப் பணி ஊதியம் ஒப்பந்தப்படி ஒருநாள் ஊதியம் வழங்கிட வேண்டும்.

மோட்டார் வாகன சட்ட  திருத்தத்தின்படி அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது சாதாரண ஜனங்களை பாதிக்கின்ற இந்த திருத்தம் கைவிடப்பட வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

சம்மேளன திருச்சி மண்டல தலைவர் நேருதுரை, பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ், தலைவர் வே. நடராஜா உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோஷமிட்டு பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO