திருச்சியில் சிறுதானிய உணவு திருவிழா
திருச்சி சமயபுரத்தில் முதல்முறையாக மிக பிரமாண்டமான ஒரு உணவு திருவிழா நடைபெற உள்ளது 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதையொட்டி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் வருகின்றமே ஐந்தாம் தேதி சிறுதானிய உணவு திருவிழா மற்றும் ENVIRON 23 கொண்டாடப்பட உள்ளது.
பலதரப்பட்ட சிறுதானிய வகைகளின் அணிவகுப்பில் நிரம்பவிருக்கும் கல்லூரி வளாகம் மற்றும் சிறுதானிய சமையல் போட்டிகள் கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள் மரக்கன்று மூலிகை கண்காட்சி பாரம்பரிய விதை வங்கி சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் இயற்கை பானங்கள் இயற்கை உணவு கண்காட்சி இயற்கை மருத்துவ குறிப்புகள் ஆகிய பல்வேறு பட்ட கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்று வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை சார்பில் மிகப்பெரிய இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் ஆரோக்கியமான சிறுதானிய உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உலக சாதனைக்கான ஒரு முயற்சி விழாவில் எடுக்கப்பட உள்ளது.
மாலையில் விருது வழங்க விழாவில் பாரம்பரிய பரதநாட்டியம் நாட்டுப்புற கலைகள் பறை இசை நடைபெறும். சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் இன்றைய சமூகத்தின் சிறுதானிய உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் வகையில் அதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn