வனப்பரப்பை அதிகரிக்க மரக்கன்று வழங்க திட்டம்
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க, வனத்துறை வாயிலாக மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம், பல்லுயிர் பரவல், ஆகிய திட்டங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி, கல்லுாரிகள், அரசு நிலங்கள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
தேக்கு, வேங்கை, செம்மரம், பலா மரக்கன்றுகள் விவசாயிகளுக்கும், பள்ளி, கல்லூரிகள், அரசு நிலங்கள், குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் நடவு செய்வதற்கு நாவல், நெல்லி, பாதாம், மகாகனி, வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படும்.தயார் நிலையில் உள்ளது.
இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிறுவனங்கள் கீழ்க்கண்ட வனச்சரக அலுவலர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்கிறோம். தேவையான ஆவணங்கள் : புகைப்படம் 2, ஆதார்நகல் 3. பட்டா / சிட்டா நகல். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : வனசரக அலுவலர்வன விரிவாக்க மையம் P.Kஅகரம் திருச்சி . செல் : 9865884323 விளம்பர அலுவலர் வனவிரிவாக்க மையம் P.K.அகரம் திருச்சி - செல்: 9787793208.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn