திருச்சியில் நாளை (22.03.2024) திருக்குறள் நூல்கள் குறித்த எண்ணப்பகிர்வுகள் நிகழ்ச்சி

திருச்சியில் நாளை (22.03.2024) திருக்குறள் நூல்கள் குறித்த எண்ணப்பகிர்வுகள் நிகழ்ச்சி

கற்க கசட மற்றும் வலைத்தமிழ்.காம் இணைந்து வழங்கும் நவில்தொறும் நூல் நயம் என்ற தலைப்பில் வெள்ளிதோறும் திருக்குறள் நூல்கள் குறித்த என்ன பகிர்வுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இணையதள வாயிலாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நூல் - நூலாசிரியர் குறிப்பு : நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் 'முதுபெரும் புலவர்' என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த 'செம்மல்' பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு 'திருவள்ளுவர் விருது' வழங்கி சிறப்பித்தது. 'தமிழ் இமயம்' என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.  

'பொருட்பயனிலை' (அத்தியாயம்-4) குறித்த நயவுரை : மு. இராமநாதன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை கட்டிடப் பொறியியல் படிப்பும், அங்கேயே மேலாண்மைத் துறையில் விற்பனைத் துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கு பெற்றவர். ராஜ் டிவி அகட விகடம் நிகழ்ச்சியில் இருமுறை பங்கு பெற்றவர். திருச்சி புனித வளனார் கல்லூரியில் மேலாண்மைத்துறை வருகை-பேராசிரியராக பணி புரிபவர். BNI என்ற தொழில் கூட்டமைப்பின் பயிற்றுநராக இருப்பவர். மேலைச்சிவபுரி வள்ளுவர் மன்ற இணைய வழி நிகழ்வுகளை மருத்துவர் சுப. திருப்பதி அவர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருபவர்.

பல ஆன்மிக நிகழ்வுகளில் சொற்பொழிவாளராகவும், இலக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவராகவும் விளங்குகிறார். அகில இந்திய வானொலியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தன்னை ஒரு 'தமிழார்வலர்' என்று அடையாளப்படுத்தி கொள்வதை பெருமையாக கருதுகிறார். திருச்சியில் furniture வணிகம் செய்து வருகிறார். மேலும் பங்குச் சந்தை ஆலோசகராகவும் செயலாற்றுகிறார்.

Join Zoom Meeting : https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID : 988 6476 9563

Passcode : 1330

ஒவ்வொரு வாரமும், இதே இணைப்பு இதே நேரம்! கொள்ள கீழ்கண்ட லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கான Zoom ID, Password கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision