வந்ததே வந்தே பாரத் எழும்பூர் - நெல்லை இடையே 24ம்தேதி கொடியசைக்கிறார் மோடி ! நான்கு மணிநேரத்தில் திருச்சி !!

வந்ததே வந்தே பாரத் எழும்பூர் - நெல்லை இடையே 24ம்தேதி கொடியசைக்கிறார் மோடி ! நான்கு மணிநேரத்தில் திருச்சி !!

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் 24ம் தேதி தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில், விஐபிகளுக்காக 1 பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. 652 கிலோ மீட்டர் தூரத்தை, இந்த ரயில் 7.50 மணி நேரத்தில் சென்றடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

விஐபி பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூபாய் 2 ஆயிரத்து 800 முதல் ரூபாய் 3 ஆயிரம் வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர்ஒருவருக்கு ரூபாய் ஆயிரத்து 200 முதல் ரூபாய் ஆயிரத்து 300 வரை கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்னை எழும்பூருக்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடையும். 

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் நேற்று திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது... பிரதமர் மோடி வரும் 24ம் தேதி 'மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதில் தெற்கு ரயில்வே கோட்டத்தில், காசர்கோடு -திருவனந்தபுரம், சென்னை விஜயவாடா, நெல்லை சென்னை இடையே - 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

ஹையா ஜாலி இனி திருச்சிக்கு நான்கு மணி நேரத்தில் பறக்கலாம் பயணிக்கலாம் !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision