உளுந்து பயிரில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

உளுந்து பயிரில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்திற்கு தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் களப்பணியாற்ற வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருவாசி கிராமத்தில் உளுந்து பயிரில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் செயல்முறை கலந்தாய்வை நடத்தினர்.

இதில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் கலந்து கொண்டு உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து உரை ஆற்றினார். வேளாண்கல்லூரி மாணவிகள் உளுந்து மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்துவதற்காக இமிடாகுளோபிரிட் மற்றும் அசிபெட் போன்ற ரசாயன மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும் மேலும் வீட்டிலேயே எளிதான முறையில் செய்யக்கூடிய மஞ்சள் ஒட்டுப்பொறியினைத் தயாரித்து பயன்படுத்தும் முறையினை செய்து விளக்கினர். இப்பொறியில் சாறு உறுஞ்சும் பூச்சிகளான அஸ்வினி, தத்துப்பூச்சி, அந்து பூச்சி,வெள்ளை ஈ போன்ற பயிருக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. 

இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் திவ்ய ரேச்சல், ஹெர்லின், இஷ்ரத் ரிகானா, ஜனனி, ஜெயந்திகா, ஜெனோ வெர்ஜின், ஜனனி மற்றும் ஜோதி முகுந்தா ஆகியோர் கொண்ட குழு கல்லூரி மாணவிகள் வழி நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision