வெயில் தாக்கம் - சிக்னலில் நிழற்குடை அமைத்த திருச்சி மாநகர காவல் துறை

வெயில் தாக்கம் - சிக்னலில் நிழற்குடை அமைத்த திருச்சி மாநகர காவல் துறை

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தொடக்க உள்ள நிலையில் முன்னதாக திருச்சியில் 105०C வரை வெயில் சுட்டெரிக்கிறது.

இதனால் மதியம் 12:00 மணி முதல் 4:00 மணி வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பகல் நேரங்களில் பெரும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகிலுள்ள புத்தூர் நால்ரோடு சிக்னலில் திருச்சி மாநகர காவல் துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர்.

இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நல்ல முயற்சிக்கு வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு தெரிவித்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த ஆண்டு தலைமை தபால் நிலைய சிக்னலில் இது போன்ற நிழற்குடை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision