மண்டபங்களில் நிகழ்ச்சி நடைபெற்றால் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் - திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறை ஆலோசனை கூட்டம்!!

மண்டபங்களில் நிகழ்ச்சி நடைபெற்றால் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் - திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறை ஆலோசனை கூட்டம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. 

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2021 கல்யாண மண்டபங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அறிவுரைகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சமமான ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கு இடையே உருவாக்கிடவும் பணம் மற்றும் பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கு இடையே தேவையற்ற செல்வாக்கினை செலுத்துவதை தடுத்திடவும் பல்வேறு அறிவுரைகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன் விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் ,வேட்டி சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வளைகாப்பு ,பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கல்யாண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மண்டபங்கள் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். கோவில் அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோஅல்லது அவர்கள் முகவர்கள் வாக்காளர்களுக்கு விருந்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.  

வாக்காளரின் நியாயமாகவும் பாரபட்சமின்றி வாக்களிப்பது வெகுவாக தடை செய்கின்றனர். எனவே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற ஏதுவாக கல்யாண மண்டபம் சமுதாய கூட உரிமையாளர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்யாண மண்டபங்கள் முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம் திருமண பத்திரிக்கை ,குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்யவும் முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் அவை குறித்த தகவல்கள் உடனடியாக அருகாமையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் எவரும் கல்யாண மண்டபத்தில் தங்க அனுமதி தரக்கூடாது.

மேற்சொன்ன விதிமுறைகளின்படி சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும் சுமூகமாக நடைபெறும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி நற்பெயர் பெற்றுத் தருமாறும் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயபிரித்தா அலுவலக மேலாளர் (குற்றவியல் )திரு சிவசுப்பிரமணிய பிள்ளை ,தேர்தல் வட்டாச்சியர் திரு முத்துசாமி ,கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாய கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.