மா.மா.செ. ஆகிறாரா மனோகரன்? - மலைக்கோட்டை மாநகரில் மல்லுக்கட்டு!!

மா.மா.செ. ஆகிறாரா மனோகரன்? - மலைக்கோட்டை மாநகரில் மல்லுக்கட்டு!!

ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுக திசைக்கு ஒன்றாக பிரிந்த நிலையில், கூடாரம் விட்டு கூடு தாவிய பலரும் மீண்டும் தாய் கழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி வருவதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அறிவிப்பு சசிகலா குடும்பத்தினரைத்தவிர யார் வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதே, சரி அதற்கு என்ன ரெஸ்பான்ஸ் என்பதை விட்டு விடுவோம்.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில முக்கிய புள்ளிகள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சமீபத்திய வரவு அன்வர் ராஜா அதற்கு முன்னாள் அதிமுகவின் கொறடாவா இருந்த ஆர்.மனோகரன், புதியவர்களின் படையெடுப்பால் புத்துணர்ச்சி பெரும் என நினைக்கிறார் எடப்பாடி ஆனால் இங்கே பொங்கல் வைக்க தயாராகி வருகிறார்கள் அதிமுகவைவிட்டு அகலாதவர்கள். ஆம் அப்படித்தான் திருச்சி மாநகர் மாவட்டச்செயலாளருக்கான ரேஸ் துவங்கி இருக்கிறது.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓராண்டிற்கு முன்பு பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் இந்த பதவி இன்று வரை காலியாகவே இருக்கிறது. இப்பொழுது இந்த பதவி யாருக்கு என்கிற கேள்வி அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இந்தப்பதவியை கைப்பற்ற ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அமமுகவிலிருந்து வந்து எம்ஜி. ஆர் இளைஞரணி செயலாளராக உள்ள முன்னாள் துணைமேயர் ஸ்ரீனிவாசன், தற்பொழுது சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகி எடப்பாடியாரை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட முன்னாள் கொறடா மனோகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம், 

அதிமுக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் பணத்தையும் ஆதரவளார்களை இறக்கி தங்கள் வலிமையை காட்டி வருகின்றனர். மேற்சொன்ன இருவர்களோடு சமீபத்தில் அமமுகவின் தலைமை செயலா ளர் பதவியை உதறிவிட்டு வந்த திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்ட முன்னாள் அரசு கொறடா மனோகரனும் மல்லுக்கட்டுகிறார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதற்காக மனோகரன் மதுரை மாநாட்டில் தன்னுடைய பலத்தை காட்ட திருச்சியை சுற்றி வலம் வரத்தொடங்கிவிட்டார் என்கிறார்கள் சிலர். ஆனால் இவருக்கு லேது நைனா லேது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபின் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தனக்கு சீட் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைச்சொல்லித்தான் இவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அடங்கப்பா அப்படியா சரி சரி என சொல்லி அனுப்பி வைத்தாராம் எடப்பாடியார், ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் செளந்திரராஜன் அவர் மறைவிற்குப்பின் இங்கே முத்தரையர்களுக்குத்தான் தொடர்ந்து சீட் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெற்றியை தீர்மானிப்பவர்களாக பட்டியலினத்தவர்களும் பிராமணர்களும்தான் இருக்கிறார்கள் ஆகவே எனக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கத்தை ஒதுக்க வேண்டும் எனச்சொல்லித்தான் சேர்ந்திருக்கிறார் என்கிறார்கள் அவருடைய விஸ்வாசிகள்.

ஆக ஆக மீதம் இருக்கும் இருவரில் சீனிவாசன் கார்த்திகேயன் இருவரில் சீனிவாசன் அமமுக சென்ற வந்தவர் மேலும் அவருடைய குறி மாமன்றத்தை தாண்டாது இல்லையேல் கிழக்கு தொகுதி மட்டுமே, தற்பொழுதைய நிலவரப்படி எடப்பாடி வீட்டின் கிச்சன் கேபினேட் ஆவின் கார்த்திகேயன் தான் ரேசில் முந்துகிறார் என்கிறார்கள் மலைக்கோட்டை வட்டாரத்தில் அதுவும் தற்பொழுதைக்கு இல்லையாம் மதுரை மாநாட்டை முடித்தபிறகுதான் என்கிறார்கள் இப்பொழுது பதவி கொடுத்தால் அது மற்றவர்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் என சிரித்து மழுப்புகிறாராம் எடப்பாடியார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க எம்.சி.சம்பத்தின் உறவினரும் வழக்கறிஞருமான ப்ரியா சிவக்குமாரை தேர்வு செய்து இருப்பதாகவும் ஒரு மாவட்டத்தில் ஒரு பெண் மாவட்டச்செயலாளர் இருக்க வேண்டும் இது புரட்சித்தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு அம்மாவால் வளர்க்கப்பட்ட கட்சி ஆகவே பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்களாம். 

அனைவரையும் சமாளித்து கட்சியையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவருக்கு மலைக்கோட்டை மாநகரைப்பற்றி தெரியாதா என்ன. மாநாடாடு முடிந்தபின் மலைக்கோட்டையை யார் எடப்பாடிக்கு கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு மாநாடு முடிந்தபின் நீங்கள் கேட்டது கிடைக்கும் எனச்சொல்லி கழுவுகிற மீனீல் நழவுகிற மீனாக இருக்கிறாராம் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும் !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision