ஸ்மார்ட் சிட்டி விருது பட்டியலில் திருச்சி இடம் பெறாதது ஏன்?
2020 ஆம் ஆண்டிற்கான ஸ்மார்ட் சிட்டி விருதுகள் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதில் இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் சூரத் (குஜராத்) ஆகியவை இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக விருதை வென்றன. மாநில அளவில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், அதை அடுத்து மத்தியப் பிரதேசமும், தமிழ்நாடும் உள்ளன. தமிழகத்தில் ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் விருது கிடைத்துள்ளது.
ஆனால், இப்பட்டியலில் திருச்சி இடம் பெறாதது திருச்சி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஸ்டார் சிட்டி திட்டத்தை திட்டமிடுவதில், செயல்படுத்துவதிலும் ஒரு நகரத்தின் செயல்திறனை மதிப்பீடுகையில் சிறந்த நடைமுறைகளை அங்கீகரிக்க ISIC நிறுவப்பட்டது. சுற்றுச் சூழல், சமூக அம்சங்கள் கலாச்சாரம் மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருதுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் மொத்தம் 71 நகரங்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆனால் திருச்சி அவற்றில் இடம் பெறவில்லை. 19 பிரிவுகளின் கீழ் கொடுக்கப்படும் இவ்விருதுகள் திருச்சி இடம் பெறாதது திருச்சி மாநகர நிர்வாகத்தின் மெத்தனப் போக்கான செயல்திறனை வெளிக்காட்டுகிறது.
திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள திட்டங்களுக்கான செயல்பாடுகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளதால் வரும் ஆண்டுகளில் விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெறுவோம் என்று கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.
குறிப்பாக சுகாதார நகர்ப்புற இயக்கம் மற்றும் கழிவு மேலாண்மை அகற்ற மாநகராட்சி கவனம் செலுத்துவதே இல்லை. திட்ட முன்மொழிவுகள் தயாரிப்பதில் பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்படுத்துவது திருச்சி தவறிவிடுகிறது. போக்குவரத்து மேலாண்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாநகர நிர்வாகம் தவறி விடுகிறது. திருச்சியை இரண்டாம் தலைநகரமாக முன்மொழியும் பொதுமக்களிடையே இந்த விருது பட்டியல் குறித்த பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW