இளைஞர்களே.. மாணவர்களே.. பொதுமக்களே.. உஷார்

இளைஞர்களே.. மாணவர்களே.. பொதுமக்களே.. உஷார்

சமீபகாலமாக சைபர் குற்றவாளிகளால் வீட்டில் உள்ள பெண்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களை குறிவைத்து நடந்து வரும் Job/ Part Time Job/ வீட்டில் இருந்தபடியே வேலை என்று கூறி வரும் சமூகவலைத்தளமான Telegram, Instagram, Facebook மற்றும் Edit விளம்பரங்களை பார்த்து

அதில் வீடியோ பார்த்தல் மற்றும் Edit செய்தல், மொழி பெயர்வு செய்தால் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையினை கூறியும் மேலும் போலியான website-யை உங்களுக்கு அனுப்பி அதில் முதலீட்டு அல்லது பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் இருமடங்கு அல்லது மும்மடங்கு லாபம் வரும் என பல விதமான ஆசை வார்த்தைகள் கூறியும், அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளை நம்பி உங்கள் பணம் மற்றும் சுய விவரங்கள் மற்றும் அடையாளங்களை இழந்துவிடாதீர்கள்.

மேலும் நீங்கள் கொடுக்கும் உங்கள் சுய விவரங்கள் வேறு ஏதும் குற்றத்திற்கு உபயோகிக்கலாம். ஆகவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவ்வாறு ஏமாற்றப்பட்ட நபர் cybercrime.gov.in என்ற வெப்சைட் மற்றும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் புகார் அளிக்கலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO