ஆட்சியரின் ஆடியோ அட்வைஸ் - வைரல்
தமிழகத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் தற்பொழுது பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகதிருச்சி மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் திருச்சி மாவட்ட மக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ வெளியீட்டு உள்ளனர். அதில் திருச்சியில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் காற்றின் வேகமாக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழும் நிலை ஏற்படும். அதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும்.
மின்னலின் தாக்கம் இருக்கக் கூடும் என்பதால் திறந்தவெளிகளிலும், விவசாய நிலங்களிலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் மழை அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
இதனால் சிறார்கள், மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த மழை காலத்தில் எந்த விபத்தும் நிகழா வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO