காந்தி மார்க்கெட்டை திறக்க 24ம் தேதி மாலை முதல் திருச்சியில் காய்கறி விற்பனை செய்யப் போவதில்லை - வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு!

காந்தி மார்க்கெட்டை திறக்க 24ம் தேதி மாலை முதல் திருச்சியில் காய்கறி விற்பனை செய்யப் போவதில்லை - வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு!

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி மாலை முதல் மாவட்டத்தில் எங்கும் காய்கறி விற்பனை செய்யபோவதில்லை - காந்தி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

திருச்சி காந்தி மார்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.இதில் 27 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு,

26.11.2020 ஆம் தேதி காந்தி மார்கெட் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.அன்று காந்தி மார்கெட்டை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும்

24.11.2020 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யமாட்டோம்.26 ஆம் தேதி எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் 27 ஆம் தேதி காந்தி மார்கெட்டில் வியாபாரம் செய்வோம்.

பாதகமாக தீர்ப்பு வந்தால் 27 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். குடும்பத்துடன் காந்தி மார்கெட் முன்பு உண்ணாவிரம் இருப்போம்.அதே போல வாக்காளர் அடையாள அட்டை,ரேசன் அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம்.அதற்கும் தீர்வு வரவில்லையென்றால் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.தொடர்ந்து பேசிய அவர்,

தமிழகம் முழுவதுமுள்ள காய்கறி மார்கெட்டுகள் திறந்து விட்ட நிலையில் காந்தி மார்கெட்டை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

காந்தி மார்கெட்டை திறக்க ஏற்கனவே போராட்டம் அறிவித்த போது மாவட்ட ஆட்சியரிடம் நடந்த பேச்சுவார்த்தை யின் காரணமாக அந்த போராட்டங்கள் திறம்ப பெறப்பட்டது.ஆனால் இந்த முறை நிச்சயம் போராட்டம் நடைபெறும்.காந்தி மார்கெட் திறக்கும் வரை காய்கறிகள் விற்பனை செய்ய மாட்டோம் என கூறினார்.