பயிரிட்டு இருந்த நெல் , வாழை நஷ்டமடைந்ததால் தாய் மகன் தற்கொலை

பயிரிட்டு இருந்த நெல் , வாழை நஷ்டமடைந்ததால் தாய் மகன் தற்கொலை

கடன் தொல்லையால் திருச்சி திருவானைக்கோவில் கணபதி நகரைச் சேர்ந்த  கூலித் தொழிலாளி ரமேஷ் பாபு அவரது தாயார் செல்லம்மாள் ஆகியோர்  விஷமருந்தி தற்கொலை. ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை

திருவானைக்காவல் கணபதி நகர் பகுதியில் வசித்து வந்த செல்லம்மாள் (65) , இவருடைய மகன் ரமேஷ் பாபு (45) விவசாயம் செய்து வந்தனர். கொண்டயம் பேட்டை பகுதியில் குத்தகைக்கு 3 ஏக்கர் நிலம் வாங்கி நெல் , வாழை பயிரிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

இதனால் மனமுடைந்த தாய், மகன் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.