குடும்பப் பிரச்சனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

குடும்பப் பிரச்சனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (41). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தகராறு செய்த கணவர் திருநாவுக்கரசு கடந்த இரண்டு நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision