திருச்சியில் அரை நிர்வாணத்துடன் செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் அரை நிர்வாணத்துடன் செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகள் போராட்ட விவசாயிகளை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர் டெல்லியில் (13.02.2024) இன்று போராட்டம் நடைபெற உள்ளதால், அதனை தடுக்க மத்திய பிஜேபி அரசு விவசாயிகள் வரும் வாகனங்களை தடுக்க பல்வேறு முள்வேலிகளையும், தடுப்பு சுவர்களையும், இரும்பு தடுப்புகளையும் வைத்து மறிகின்றனர்.

இது ஜனநாயக நாட்டிற்கு எதிரானது, விவசாயிகள் தங்கள் கோரிக்கையை இந்தியாவில் உள்ள எந்த பகுதிகளிலும் போராடலாம் என்று அரசமைப்பு சட்டம் உரிமை வழங்கியும், அதனை தடுப்பது சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது. இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பேரணியாக வந்த விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று (13.02.2024) கோமனதுடன் போராட்டம் நடத்தினர்.

அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு விவசாயிகள் திடீரென அருகில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர் உடனடியாக கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை கீழே இறக்கினர். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாமல் டெல்லியில் போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision