மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாள் சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாள் சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டி

அகில இந்திய அளவிலான இரண்டுநாள் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் நடைபெற்றது.

2022 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் 29 செக்ஸ் வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களின் சர்வதேச மாஸ்டர் சஷிகாந்த் குட்வால் உள்ளடங்குவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் இந்த சாம்பியன்ஷிப் ஊனமுற்றோருக்கான செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் 50% மற்றும் அதற்கு மேல் உடல்ஊனம் உள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது மகாராஷ்டிரா தெலுங்கானா கேரளா மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

இரு தினங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இறுதி போட்டியில் வெற்றி பெற்று 1முதல் இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காந்தி மெர்ரி 2ம் இடத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் 3ம் இடத்தை தமிழகத்தை சேர்ந்த வி. கண்ணன் அவர்களும் 4 ம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிடித்தனர்.

 இவர்கள் வருகின்ற பாரா ஆசிய போட்டிகளில் விளையாட உள்ளனர். போட்டிகளில் திருச்சியில் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செஸ் பெடரேஷன் ஆப் பிஸிக்களி டிஸ்ஏப்ள்டு அமைப்பின் நிர்வாகிகள் தலைவர் எஸ். சகாய ராஜ் செயலாளர் ஜீ. காணிக்கை இருதய ராஜ் பொருளாளர் எம். பாஸ்கர் துணை தலைவர்கள் ஜகதீஷ் ராவ் ,சுரேஷ் அகர்வால் யேசுபாபு இணை செயலாளர்கள் சேக்நசீர்,சத்தியமூர்த்தி, ஜான் ஏஞ்சல்,பிரசாத் தாஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO