குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் பெற அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாலும், விவசாயிகள் உழவுப்பணி மற்றும் பல்வேறு வேளாண் பணி களை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் டிராக் டர் கலப்பைகள், ரோட்டாவேட்டர், பவர்டில்லர், நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை இயந் திரம், டிப்பர், வைக்கோல் சுற்றும் இயந்திரம் போன்ற வேளாண் இயந் திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயி களுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வேளாண் இயந்திரங்கள் பற்றிய விபரங்களை அறிய www.res.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக சென்று coop e vadagai என உள்ளீடு செய்ய வேண்டும். அத்தளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வேளாண் இயந்திரங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்க ளின் வாடகை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் முன்பதிவு செய்து குறைந்த வாடகைக்கு பெற்று உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision