இலவச பேருந்து பயண சலுகை அட்டையினை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம்

இலவச பேருந்து பயண சலுகை அட்டையினை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜீலை 2024 முதல் மார்ச் 2025 வரை ஒன்பது மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது.

வருகின்ற (19.06.2024), (20.06.2024) மற்றும் (21.06.2024) ஆகிய மூன்று தினங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு பின்புறம் அமைந்துள்ள மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் முகாம் காலை 10:00 மணி முதல் 02:00 மணி வரை நடைபெற உள்ளது. சிறப்பு பார்வையற்றோர்கள், கை கால் பாதிக்கப்பட்டோர்கள், மனவளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் (ம) வாய் பேச இயலாதோர்கள் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது இலவச பேருந்து பயண அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம் மற்றும் புதிய அட்டை வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இம்முகாமில் கலந்துக்கொள்ளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல்-1. தனித்துவ அடையாள அட்டை (UDID) நகல்-1, தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம்-2ம் கொண்டு வரவேண்டும்.

கை கால் பாதிக்கப்பட்டோர், அறிவுச்சார் குறைபாடுயுடையோர் (மனவளர்ச்சி குன்றியோர்கள்), காது கேளாத (ம) வாய் பேச இயலாதோர், கல்லூரி மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கு செல்வோர் கல்வி பயிலும் நிறுவனத்தில் கல்வி பயில்வதற்கான சான்று (Bonafide Certificate). சுயதொழில் செய்வோர் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்திடம் பணிச் சான்று மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்கள் அரசு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கான சான்றுடன் வரவேண்டும்.

எனவே இச்சிறப்பு முகாமில் இலவச பேருந்து பயண சலுகை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துடன் உரிய சான்றுகளை வழங்கி உடனடியாக தங்களது இலவச பேருந்து பயண சலுகை அட்டையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற 6061 பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision