திருச்சியில் 5.16 கிலோ ஹான்ஸ், பான் பராக் பறிமுதல் - கடைக்கு சீல் ஒருவர் போலீசில் ஒப்படைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் துவாக்குடி தாலுகா பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வாழவந்தான் கோட்டை, மெயின் ரோட்டில் உள்ள ஆ.ஹென்ரி சின்னப்பன் BA., LLB த/பெ.ஆரோக்கியசாமி என்பவரது ஹென்ரி மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு சுமார் 5.16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மேல்நடவடிக்கைகாக துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், மகாதேவன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர். மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு கூறுகையில்.... தொடர்ந்து இது போன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். தகவல் கொடுப்பவரின் விபரம் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் எண் : 96 26 83 95 95
மாநிலபுகார் எண் : 9444042322
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision