திருச்சியில் விவசாயிகளுக்கான மண்டல அளவிலான 2 நாள் வர்த்தக தொடர்பு பணிமனை

திருச்சியில் விவசாயிகளுக்கான மண்டல அளவிலான 2 நாள் வர்த்தக தொடர்பு பணிமனை

திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை 2 நாட்களுக்கு கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் சிவராசு பேசுகையில்... தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் 4 உபவடி நீர் பகுதிகளில் 9.68 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து திருச்சி மாவட்டத்தில் நான்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.

"இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம்" விவசாயிகள் பெறுவதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப உதவி மற்றும் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைத்திருந்தனர் இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO