திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் 4வது மாநாடு
திருச்சி மாவட்டAlTUC தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் 4வது மாநாடு 08/11 /2022 செவ்வாய் காலை 10.00 மணிக்கு ஸ்ருதி மஹாலில் மாவட்ட தலைவர் S.சிவா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டின் கொடியினை AITUC மா.பொதுசெயலாளர் க.சுரேஷ் ஏற்றிவைத்தார். மாநாட்டை வாழ்த்தி அமைப்புசாரா சங்க மாவட்ட செயலாளர் A.K.திராவிடமணி. கட்டுமான சங்க மாவட்ட தலைவர் M.R.முருகன். மாதர் சங்கம் K. ஆயிஷா.கே.அண்ணாதுரை, சொக்கி. சண்முகம். வங்கி ஊழியர் சங்கம் G.ராமராஜ். ஜனசக்தி உசேன். சானிடரி P.ராஜா.சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மாவட்ட தலைவராக S.சிவா, செயலாளராக A. அன்சர் தீன், துணை தலைவர்களாக.சுரேஷ் முத்துசாமி, திருவரம்பூர் பழனிசாமி. ஏர்போர்ட் ராஜா.ம. நல்லூர் முத்துகிருஷ்ணன். துணை செயலாளர்களாக சண்முகம். A ரவி, ஜனசக்தி உசேன். K. மேகராஜ் பொருளாளராக S சையது அபுதாஹீர் உட்பட 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்ந்தெடுக்கபட்டனர்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1.சென்னை தவிர்த்த அனைத்து மாநகராட்சிகளும் நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப கூடாது என தமிழக அரசு வெளியிட்டுள்ள (ஆணை எண் 152) உள்ளாட்சி அமைப்புகளை பலவீனப்படுத்தி உள்ளது. வெளி முகமை (அவுட்சோர்விங்) மூலம் ஒப்பந்தம் கொடுத்தால் குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்கள் பணி அமர்த்தக்கூடும் அப்படி செய்தால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் எனவே அரசு ஆணை 152 ஐ கைவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
2. சாலையோர வியாபாரிகள் சட்டம் 2014 ஐ முறையாக பயன்படுத்தி அந்தந்த பகுதிகளில் ஒழுங்குபடுத்தி கடை போட அனுமதிக்க வேண்டும்.
3.60 வயது கடந்த தரைக்கடை வியாபாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
4. சாலையோர வியாபாரிகளுக்கு கழிப்பிடம், குடிநீர் வசதி மாநகராட்சி அந்தந்த பகுதிகளில் செய்து தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் 157 தரைக்டை வியாபாரிகள் கலந்துகொண்டனர். AITUC மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி மாநாட்டை நிறைவு செய்தார்கள். முன்னதாக நந்தி கோயிலில் இருந்து மாநாட்டு பேரணி துவங்கி மாநாட்டு இடத்தை அடைந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO