திரிபுரசுந்தரி சமேத திருப்பிரம்பிநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து கட்டப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் திருபிரம்பீஸ்வரர் உடனாய திரிபுரசுந்தரி கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 1ம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 201 பெண்கள் கலந்து கண்டு விளக்கு பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு 108 மந்திரங்கலுடன் வழிபாடு நடைபெற்றது.
மேலும் விநாயகரைப் போற்றி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தச்சங்குறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision