ஏழைகளுக்கு உணவளித்து வரும் திருச்சி மோடி கிச்சன்

ஏழைகளுக்கு உணவளித்து வரும் திருச்சி மோடி கிச்சன்

மனிதனின் வாழ்வில் உணவும், உடையும் மிக முக்கியமானவை. உலகத்தில் இவை இரண்டும் இல்லாதவர்கள் ஏழைகள் என்ற கோட்டின் கீழ் வரையறுத்து வருகிறோம். இப்படி ஏழ்மையில் இருப்பவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் இந்த சேவை என்று கூறுகிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த  77 வயதான ஸ்ரீ சேஷாத்திரி. 

இந்த தொண்டு சேவை பற்றிய ஸ்ரீ சேஷாத்திரி கூறுகையில்.. எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து எல்லோருக்கும் உதவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே என் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த கொரானா  கால கட்டத்தில் ஆலயங்களுக்கு மட்டுமின்றி வெளி உலகத்திற்கு வர முடியாமல் மக்கள் தவித்த போது தான் சிந்தித்தேன், எத்தனையோ ஆயிரம் பேர் உணவு இல்லாமல் உடை இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு எப்படி  உதவிட வேண்டும் என்று "மோடி கிச்சன் திருச்சி" என்ற பெயரில் சேவையை தொடங்கினோம் .

பார்வையற்றவர்கள், தொழுநோயாளிகள், என அவர்களது வீடுகளுக்கே சென்று உணவு அளிக்க முன் வந்தோம். இலையில் ஒரு வேளை உணவு அளித்து விட்டு வருவதில் எவ்வித பயனுமில்லை என்று கருதி அவர்கள் இருப்பிடங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு தேவையான உணவை அவர்களே போதும் என்று கூறும் அளவிற்கு அள்ளி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை செய்து வருகிறோம். ஊரடங்கு காலத்தில் 
6000 பேருக்கு தினமும் உணவு அளித்து வந்தோம். தற்போது மாதத்தில் ஒருநாள் ஏதேனும் ஒரு கிராமங்களுக்குச் சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அப்படி  இல்லையா கிராமத்தில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உணவளித்து உடை அளித்து வருகிறோம். 

யாரிடமிருந்தும்  நாங்கள் மக்களுக்காக உதவுகிறோம் நீங்களும் உதவுங்கள் என்று கேட்டதில்லை. நாங்கள் செய்வதை பார்த்து எங்களோடு இணைந்து ஏராளமானோர் இந்த சேவையை செய்து வருகின்றனர். பழைய உடைகளை சேகரித்து அதனை டிரைகிளினிங்க் செய்து அயன் செய்து அவர்களிடம் கொடுக்கிறோம். மோடி கிச்சன் திருச்சி என்ற பெயர் வருவதற்கு முக்கிய காரணம் இந்த அசாதாரண  காலத்தில் அரசின் உதவி இன்றி எவ்வித உதவிகளும் செய்ய இயலாது. 

எனவே இந்தப்  பெயர் வைத்ததன் மூலம் மக்களிடையே எவ்வித தயக்கமும் இன்றி எங்களால் உணவுகளையும், உடைகளையும் கொண்டு சேர்க்க முடிந்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் அவற்றை முழுமையாக நம்பி இவர்களுக்கு உணவளிப்பது என் வாழ்நாள் லட்சியமாக கருதி உதவி வருகிறேன். என் குடும்பத்தாரும் எப்போதும் என்னோடு துணை நிற்கின்றனர் என்கிற  ஸ்ரீ சேஷாத்ரி. இவர்களின் தொண்டும், சேவையும் எப்போதும் தொடரட்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu