தமிழ்நாடு ஆளுநர் உருவ பொம்மை எரிக்க முயன்ற ஆறு பேர் கைது

தமிழ்நாடு ஆளுநர் உருவ பொம்மை எரிக்க முயன்ற ஆறு பேர் கைது

தமிழ்நாடு சட்டசபை நேற்று துவங்கியது. இதில் ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு என்கின்ற வார்த்தையை கூறாமல் புறக்கணித்தார். தமிழ்நாடு என்ற வார்த்தையை கூறாமல் புறக்கணித்த தமிழக ஆளுநர் என் ஆர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் உருவ பொம்மை எரிக்க முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து அவரிடம் இருந்த உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமலும், திராவிட மாடல், அண்ணா, பெரியார், காமராஜர் அவர்களின் பெயர்களை சட்டப்பேரவையில் உரையில் இருந்ததை கூறாமல் தவிர்த்ததை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழகத்தை சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆளுநரின் புகைப்படத்தை எடுத்து கிழித்து எரிந்து தங்களின் எதிர்ப்புகளை காட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn