புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு

புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணியினை பேணி காக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஜனவரி14 போகி பண்டிகை திருநாள் வருவதையொட்டி வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தெருக்களில் போட மாட்டேன், நெருப்பு வைத்து எரிக்க மாட்டேன் எனவும்,

திடக்கழிவுகளை சேகரிக்க வரும் வாகனங்களில் தூய்மை பணியாளிடம் மட்டுமே வழங்குவேன் என்றும் மற்றவர்களையும் கடைபிடிக்க வைப்பேன் என்கிற உறுதிமொழி பள்ளி மாணவர்களிடம் கடைபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வு  23 வது வார்டில் அமைந்துள்ள உறையூர் கலைப்பள்ளி மான்ய துவக்கப் பள்ளியில் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லலிதா மற்றும் பள்ளியின் செயலர் மஞ்சரி கிருஷ்ணகுமார் மற்றும் அப்பகுதியின் துப்புரவு மேற்பார்வையாளர் மோகன்ராஜ் , பில் கலெக்டர் முத்தமிழ்செல்வன், அனிமேட்டர் நளினி மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn