திருச்சியில் யானைகள் தின கொண்டாட்டம்

திருச்சியில் யானைகள் தின கொண்டாட்டம்

திருச்சிராப்பள்ளி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளையும்,

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் தலைமை வன உயிரின பாதுகாப்பு அவர்களின் ஆணைக்கிணங்க யானைகள் மறுவாழ்வு மையத்தில் கொண்டுவரப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் N. சதீஷ் IFS மற்றும் மாவட்ட வன அலுவலர் G.கிரண் IFS அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் (Mini Zoo)/ உதவி இயக்குனர், S. சம்பத்குமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் V.P. சுப்பிரமணியம், கோபிநாத், கிருஷ்ணன், தினேஷ்குமார், ரவி மற்றும் வன பணியாளர்களுடன்

எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின் யானைகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு மற்றும் வனத்திற்கான யானைகளின் பங்களிப்பை உணர்த்தும் விதமாக விழா அனுசரிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision