என் ஐ டி-யில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவியை சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் உதயநிதி.

என் ஐ டி-யில் சேர்ந்துள்ள  பழங்குடியின மாணவியை சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் உதயநிதி.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் தென்புர நாடு பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் பச்சை மலையில் அமைந்துள்ள சின்ன இலுப்பூர் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என் ஐ டி யில் சேர்ந்துள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ரோகினியை அவர் வீட்டில் சந்தித்தார். தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறி சிறிது நேரம் கலந்துரையாடினார். அந்த மாணவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேநீர் வழங்கினார்.

அதனை உதயநிதி ஸ்டாலின் வாங்கி அருந்திவிட்டு மாணவியரிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து ரோகினி குடும்பம் விவசாயம் செய்ய ஏதுவாக டிராக்டர் ஒன்றையும் அமைச்சர் வழங்கினார் அதனை அடுத்து ரோகிணி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு மின் வசதிக்கான சேவையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் தங்கள் இல்லம் தேடி வந்து தன்னை சந்தித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மாணவி ரோகினி தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் கல்வி குறித்து கலந்துரையாடினார். என்னவாக விருப்பம் என என்னிடம் கேட்டார் அதற்கு நான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என கூறினேன். அதற்கும் வாழ்த்து தெரிவித்தார். நன்றாக படிக்க வேண்டும் அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என கூறியதாக மாணவி ரோகினி தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision