ஊரடங்கு  தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு தேடிச் சென்று உணவளித்து உதவும் ஸ்ரீ பவுண்டேஷன் தொண்டு நிறுவனம்

ஊரடங்கு  தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு தேடிச் சென்று உணவளித்து உதவும் ஸ்ரீ பவுண்டேஷன் தொண்டு நிறுவனம்

கொரோனா காலகட்டம் என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு  முடிந்த உதவிகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களும் சமுக ஆர்வலர்களும் செய்துவரும்  நிலையில்  வயலூரில் அமைந்துள்ள ஸ்ரீ தொண்டு நிறுவனம்  ஊரடங்களால் தடை செய்யப்பட்ட  பகுதிகளுக்கு அங்குள்ள ஏழை மக்களுக்கு  தேடிச்சென்று 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

இதுபற்றி   ஸ்ரீ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணய்யர்   நம்மோடு பகிர்ந்து கொள்கையில் ,ஏழை எளிய மக்களுக்கு  இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உணவளித்து உதவுவது என்பது மிகப்பெரிய  பயனாக இருக்கும் என்று கருதியே இந்த சேவையை  செய்து வருகின்றோம் .பிடி அரிசி என்ற பெயரில் சென்ற ஆண்டு கூட  200 நாட்கள் 5000 மேற்பட்டவர்களுக்கு உணவினைத்  அவர்களுடைய இருப்பிடம் தேடி சென்ற அளித்தோம்.


 இந்த ஆண்டும் எங்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு செய்ய வேண்டும் என்று  திருச்சியிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று உணவு அளித்து வருகிறோம்.
 ஏதேனும் ஒரு கலவை சாதத்தை மக்களுக்கு அளித்து வருகிறோம் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்பதால் அங்குள்ள ஏதேனும் ஒரு ஒருங்கிணைப்பாளர் மூலம் உணவினை கொண்டு சென்று அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவர்கள் அப்பகுதி மக்களுக்கு  கொண்டு சேர்க்கின்றனர். தேவராயனேரி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு தேவையான உணவினை வழங்குவதற்காக பகுதியிலிருந்து கேட்டபொழுது நாங்கள்  செய்து கொடுக்க இன்றிலிருந்து தொடங்கியுள்ளோம். அதேபோன்று நாகமங்கலம் பகுதிகளிலும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றோம்.எத்தனை நாட்களுக்கு எவ்வளவு மக்களுக்கு என்று கணக்கில்லாமல் மக்களுக்கு உணவு தேவைப்படும் பொழுது அவர்களுக்கு சென்று சேரும் வகையில் எங்களால் முடிந்த வரை உதவி செய்து கொண்டே இருப்போம் என்கிறார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon