ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு தண்டால் எடுக்க முயன்ற DYFI அமைப்பினர் கைது

ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு தண்டால் எடுக்க முயன்ற DYFI அமைப்பினர் கைது

மத்திய அரசின் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளையர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 'அக்னிபாத்’என்ற புதிய திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளையர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். எனினும் அவர்களால் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும். அதன் பின்னர் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. எனினும் துணை ராணுவப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு இளையர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது. 

இந்நிலையில் திருச்சி ரயில்வே சந்திப்பு முன்பாக திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் நுழைவாயிலை நோக்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து தண்டால் எடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அக்னிபாத் திட்டம் என எழுதப்பட்ட காகிதங்களையும் கிழித்து எறிந்தனர். இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO