இடப்பிரச்சினை - தாசில்தாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

இடப்பிரச்சினை - தாசில்தாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்டது நறுங்குழல் நாயகி நகர் பகுதியில் வீட்டுமனைகளாக விஸ்தரித்த பொழுது மாநகராட்சி பூங்காவிற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்தமான இடம் கூறி அதர் தொழுவை நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

நேற்று திடீரென அந்த சர்ச்சைக்கு உரிய இடத்தை சுத்தம் செய்து வருவது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களிடம் இது சம்பந்தமாக பேசி தீர்வு காணலாம் என அறிவித்ததோடு சம்பவ இடத்தில் யாரும் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் தாலூக்கா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயபிரகாசம் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட இடம் பூங்காவிற்கு உரிய இடம் என மாநகராட்சி தரப்பிலும், இந்து பொதுமக்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முஸ்லிம் மக்கள் அது எங்களுக்கு உரிய இடம் என கூறி பிடிவாதம் செய்தனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இடம் பொது இடமாக அல்லது தனிநபர் இடமா என்பதை நாளை முறைப்படி அளந்து தெரிந்து முடிவு செய்யலாம்

பொது இடமாக இருந்தால் அதில் மசூதி அமைத்து தொழுவதற்கு முஸ்லிம்கள் முயற்சி பண்ணக்கூடாது என்றும், தனிப்பட்ட நபர் இடமாக இருந்தால் நீங்கள் அதில் தொழுது கொள்ளலாம் என கூறி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், அரசு தரப்பிலும் சம்மதித்து கையெழுத்து உள்ளனர். ஆனால் முஸ்லிம் தரப்பினர் கையெழுத்து போடாமல் சம்பந்தப்பட்ட இடத்தில் நாங்கள் தொழுவை நடத்துவோம் உங்களால் முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறினர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இடத்தில் யாரும் பிரவேசிக்க கூடாது என்பதற்காக போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திடீரென இரவு சுமார் 10:20 மணியளவில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் திடீரென திருவெறும்பூர் தாசில்தாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் திருவெறும்பூர் தாசில்தார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision