திருச்சி திமுக ஒன்றிய செயலாளரிடம் 1.50 லட்சம் பறிமுதல் - அதிகாரிகள் விசாரணை
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி ரொக்கமாக ரூபாய் 50,000 மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேலான தொகை கொண்டு செல்லும் போது அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி முழுவதும் சுமார் 17 வாகன சாவடி மையம் மூலம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருச்சி கருமண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கௌசல்யா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தனது வாகனத்தில் ரூபாய் 1.50 லட்சம் ரொக்கமாக எடுத்து வந்தது கண்ட அதிகாரிகள் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பணத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொண்டு சென்ற பணத்திற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அப்பணத்தை உடனடியாக அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ராஜேந்திரன் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்த நிகழ்வுக்காக உடைகள் எடுப்பதற்கு பணம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision