டாஸ்மார்க் ஊழியர் தற்கொலை முயற்சி-காரணமான அதிகாரிகள் பெயர் வெளியீடு

திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் விற்பனையாளராக பணி யாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் (50).இவரது பாரை அதிகாரிகள் மூடினர். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் கூறிய காரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வீடியோவில் பாலகிருஷ்ணன், 'எனது மரணத்துக்கு காரணம் டிஎம் (டாஸ்மாக் மாவட்ட மேலாளர்), மற்றும் திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர்,மற்றும் அதே பிரிவு ரைட்டர் இன்று மூவரையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் மாதமாதம் அவர்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். டெண்டர் எடுக்கும் பொழுதும் அவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறியுள்ளார். வேண்டுமென்றே என்னுடைய கடைக்கு மட்டும் டார்ச்சர் கொடுத்து மிரட்டி பூட்டிவிட்டனர்.
மேலும் என்னிடம் வேலை பார்ப்பவர்களை மிரட்டி என்னிடம் வேலைக்குச் செல்லக்கூடாது என்றும் அதையும் மீறி சென்றால் அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் போடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளனர். அவர் வேலை செய்யும் கடையில் நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து அதன்
மூலமும் அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். இப்படி வரும் பணத்தை இன்ஸ்பெக்டர் எடுத்துக் கொள்கிறார். இதேபோல அனைத்து கடைகளுக்கும் கணக்கு போட்டு மாதம் ரூ.20 லட்சம் பணம் வாங்கி கொள்கிறார். இதில் 'டிஎம்'க்கு பங்கு போகிறது. இப்படி பணத்தை வாங்கி கொண்டு டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது நாங்களா?இல்லை அதிகாரிகளா?
பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவர்களுக்கு மாதமாதம் லஞ்சம் பணம் வந்து கொண்டே இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்து நானும் மாதமாதம் காவல்துறையினருக்கு இவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டே தான் உள்ளேன். மூன்று நாட்களாகவே என் கடையில் தொடர்ந்து வேண்டுமென்றே ரைடு வந்து என் மீது மூன்று வழக்குகளை போட்டு என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர். வேலன் மருத்துவமனைக்கு கீழே என்னிடம் பணம் வாங்கிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.
என் உழைப்பை உறிஞ்சி, அவர்கள் பெரிய மனிதர்கள் போல வாழ்கின்றனர் நான் வட்டிக்கு வாங்கி பணத்தை கொடுத்துவிட்டு மனஉளைச்சலில் இருக்கிறேன். என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மீண்டும் நேற்று மாலை வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார் அதில் நான் வாய் தவறி தவறுதலாக அதிகாரிகளையும் போலீசாரையும் பேசி விட்டேன் இதில் வேறு ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision