தமிழக ஆளுநர் 2 நாள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வருகை - ஆட்சியர் வரவேற்பு

தமிழக ஆளுநர் 2 நாள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வருகை - ஆட்சியர் வரவேற்பு

பாரதிதாசன் பல்கலைகழக இணைவு கல்லூரிகளின் முதல்வர்களுடன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் கலந்துரையாடவுள்ளார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நாளை ( 09.12.2021 வரும் ஒன்பதாம் தேதி காலை 10.30 மணிக்கு ) பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றம் இந்த விழாவில், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சரும்,  பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமாகிய பொன்முடி பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். டெல்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக (பொ) தலைவர் முனைவர்.கனகசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லைகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகள் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. தற்போது நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களது பெற்றோர்களுக்கும் , நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இவ்விழாவில் கடந்த 02.10.2019 முதல் 20.11.2021 ஆம் தேதிக்குள் முனைவர் பட்டம் பெற தகுதி அடைந்துள்ளவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர். கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.

இன்று (08.12.2021 மதியம் 3மணிக்கு) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுபெற்ற  கல்லூரிகளின் முதல்வர்களுடன்,  தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த நிகழ்வு பாரதிதாசன் பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான ஒப்புதலை, கல்லூரி முதல்வர்கள் உடனே பல்கலைக்கழகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இது துணை வேந்தரின் அணை என பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பதிவாளர் மூலம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், அழைப்பு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn