கொரோனா விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தில் தனியார் பள்ளியில் சோழன் கலை மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நடந்த ஞஓவியர் சித்தன் சிவாவின் கொரோனா வைரஸ் நோய் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி... கொரோனா நோய்தொற்று காலத்தில் எப்படி எல்லாம் இருந்தது என்பதை ஓவியர் சித்தன் சிவா அழகாக ஓவியத்திறமை மூலமாக திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை எப்படி இருந்தது தமிழக அரசு எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது என்பது குறித்தும்.
கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவத் துறை, துப்புரவு துறை, பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களின் தியாகத்தை வெளிக்கொணரும் விதமாக ஓவியங்கள் கண்காட்சி இடம் பெற்றுள்ளது என்றார். ஆரம்பப் பள்ளி நவம்பர் ஒன்றாம் தேதி திறப்பதற்கு பதிலாக தீபாவளி முடிந்ததும் திறந்திருக்கலாம் என பலரும் கூறுவது பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.. இதுக்குறித்து நமது துறையிலே நவம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு திறப்பதற்கு பதிலாக தீபாவளி பிறகு தொடங்கலாம் என கூறப்பட்டதாகவும், பள்ளி திறந்ததும் எல்லோரும் கட்டாயமாக வரவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை அவர்கள் தீபாவளி முடிந்து வரலாம். நவம்பர் 1ஆம் தேதி பள்ளி திறப்பது ஒரு ஒழுங்கு தான் என்றும் 9ம் வகுப்பு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி ஆரம்பித்ததுபோல் ஒன்றாம் தேதி தான் தொடங்கபடுவதாக கூறினார்.
நீட் தேர்வு சம்மந்தமாக தமிழக முதல்வர் மற்ற மாநில முதல்வர்கள் கடிதம் எழுதியதற்க்கு 12 மாநில முதல்வர்களிடம் இருந்துபதில் வந்துள்ளதாகவும்
தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் தலைமையில் மற்ற மாநில முதல்வர்களை சந்தித்து தங்களது கருத்துக்களை வலியுறுத்தி கூறி வந்துள்ளனர்.இனிதான் அதற்கு உரிய பதில் அவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும். இந்தியாவிலேயே நமது உரிமை பிரச்சினை வந்தாலும் மாநில பிரச்சினை வந்தாலும் முதல் குரலாக இருப்பதும் எதிர்கட்சியாக இருந்த போதும் நமது தலைவர் தான் முதல்வராக இருக்கும் போது அதை சொல்லவே வேண்டியதில்லை. அதற்கு வலுசேர்க்கும் விதமாக மற்ற மாநில முதல்வர்களின் குரலும் வலுசேர்க்கும். அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்வதால் இடப்பிரச்சனை இருப்பது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் 37 ஆயிரத்து 700 பள்ளிகளுக்கு மேல் உள்ளதோடு அரசு உதவி பெறும் பள்ளிகளோடு சேர்த்து 45 ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் உள்ளது. தற்பொழுது சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் அதிகமான பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இப்படி 45 ஆயிரம் பள்ளிகள் இருக்கும் நிலையில் சில பள்ளிகளில் 10 பேரும் சில பள்ளிகளில் 100 பேர் என சேர்ந்துள்ளனர்.
எங்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்து உள்ளார்களோ அங்குதான் பிரச்சினைகள் உள்ளது. என்று அத்தனையும் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ள பள்ளியில் அருகாமையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கட்டிட வசதியை பார்த்து அதை எப்படி பகிர்ந்து கொடுக்கலாம் என்றும் மீண்டும் அந்தப் பள்ளியில் தேவையான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு அந்த மாணவர்களை அந்த பள்ளிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசித்து கொண்டிருப்பதாக கூறினார்.
விருப்பம் உள்ள குழந்தைகள் பள்ளிக்கும் வரலாம் என்றால் வராத குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுமா என்று கேட்டதற்கு ஒன்னாவது வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டால் பள்ளி முழுமையாக செயல்படும் என்றும்
ஏற்கனவே சில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஒன்பதாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பு மாணவர்கள் பிரித்து வகுப்புகள் நடைபெற்றது. தற்போழுது எல்லோரும் பள்ளிக்கு வருவதால் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்றும் திங்கட்கிழமை வரும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தான் வருவதுபோல் இருக்கும்.
அந்த இடைப்பட்ட காலத்தில் வகுப்புகளில் நடைபெறும் பாடங்களையும், வீட்டுப் பாடங்களையும் அந்த இரண்டு நாட்களில் வீட்டில் இருந்தே அவர்கள் படிப்பதற்கும் மனப்பாடம் செய்வதற்கு முயற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார். கல்வி டிவியில் 8 ஆயிரம் யூடிப் வகுப்புகள் பதிவு செய்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். அவர்கள் அந்த காலகட்டத்தில் அதை பார்த்து கொள்ள வேண்டும். பள்ளி திறப்பது குறித்து ஆய்வுகள் எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, எஸ்ஒபி இயக்குநர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் ஆரம்ப பள்ளிகளில் 1 முதல் 8-வது வகுப்பு வரை திறக்கப்படும் பள்ளிக்கும் 9 லிருந்து 12 வரை வழங்கப்பட்டிருக்கும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட அதே நிலையான எஸ் ஓ பி நடைமுறை செயல்படுத்தப்படும் எஸ்ஓபி என்பது சானிடைசர், மாஸ்க் அணிவது மட்டுமல்ல நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் பள்ளிகளில் கட்டிடத்தின் தரம் மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையிடம் வழங்க வேண்டும் பாதுகாப்பு என்பது எல்லா வகையிலும் எப்படி செய்ய முடியுமோ அதை நமது துறை செய்யும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,