வரி ஏய்ப்பு செய்த திருச்சி கோட்ட வணிகரிடமிருந்து ரூ3.24 கோடி வரி வசூல்

வரி ஏய்ப்பு செய்த திருச்சி கோட்ட வணிகரிடமிருந்து ரூ3.24 கோடி வரி வசூல்

திருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி நகரம், திருச்சி ஊரகம், தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய வணிகவரி மாவட்டங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக TNGST சட்டத்தின் கீழ் கூடுதல் தலைமைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் தேர்வு செய்யப்பட்டு திருச்சி நுண்ணறிவு கோட்ட இணை ஆணையர் மேற்பார்வையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு ஒப்பந்ததார வணிகர்களின் வணிக இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் வணிகர்களால் மறைக்கப்பட்ட விற்பனைத்தொகை ரூ.22 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. இதற்குண்டான வரி மற்றும் அதிகமாக துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி முறையே ரூ.6.32 கோடி மற்றும் ரூ.2.36 கோடி என வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. வரி ஏய்ப்பிற்கான 100% தண்டத்தொகை வரி விதிப்பாணை பிறப்பிக்கப்படும் பொழுது வசூல் செய்யப்பட வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் மேற்கண்ட ஆய்வின் மூலம் வணிகரால் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையில் ரூ.3.24 கோடி வரி வசூல் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகையை வசூல் செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO