வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், குழந்தை உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ வழங்கினார்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், குழந்தை உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ வழங்கினார்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் (27). இவரது மனைவி நித்யா (25) இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு கமலேஷ் (4) என்ற மகனும், பவ்யஸ்ரீ என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர். சக்திவேல் திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 

இவர்கள் வசித்த வீடு பழைய ஓட்டு வீடு என்பதால் கடந்த 11ந் தேதி இரவு பெய்த மழையில் சுவர் ஈரமாக இருந்ததால் விரிசல் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12 ந்தேதி இரவு  வீட்டின் முன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது  திடீரென வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்ததில் 8 மாத குழந்தை பவ்யஸ்ரீ, தாய் நித்யா  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 

இந்நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் வீதம் இரண்டு பேருக்கும் ரூ. 8 லட்சம் நிவாரண நிதியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிய அரசுக்கும், எம்எல்ஏ கதிரவனுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் சக்திவேல் ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர்,,துணை சேர்மன் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கூறியதாவது... இடியும் நிலையில் உள்ள பழமையான வீடுகளை கண்டறிந்த்து , விரைவில் அரசின் மூலம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமென கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn