பஞ்சாமிர்தம் பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் மோகன் ஜாமீனில் விடுவிப்பு!!
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன். ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரொளபதி, ருத்ர தாண்டவம், பாகாசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெயில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பெட்டி அளித்தார். அதில் துளி கூட மனசாட்சி இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் விளையாடியிருக்கிறார்கள் இதை செய்தவர்களுக்கு அருமையான தண்டனை வழங்க வேண்டும். பஞ்சாமிர்தத்தில் கூட சில பொருட்கள் கலந்ததாக தகவல்கள் கூறப்பட்டன. ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரின் இந்த கருத்தை எதிர்த்த சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரி கவியரசு, இயக்குனர் மோகன் மீது காவல்துறையில் புகராளித்தார். இந்நிலையில் சமயபுரம் காவல்துறையினர் சென்னையில் இருந்த அவரை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட அவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்- 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,
அரசுத் தரப்பு மற்றும் இயக்குனர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த மாஜிஸ்திரேட் கே.ஆர்.பாலாஜி, இயக்குனர் மோகனை ரிமாண்ட் செய்ய மறுத்து, முறையான கைது நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision