சப்பாத்தி, இடியாப்பம், பூரி மற்றும் மசாலாக்கள் - வீட்டுமுறையில் தயாராகும் உணவு பொருட்கள்!!

சப்பாத்தி, இடியாப்பம், பூரி மற்றும் மசாலாக்கள் - வீட்டுமுறையில் தயாராகும் உணவு பொருட்கள்!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 10 வருடங்களுக்கு மேல் அட்சயா புட்ஸ் செயல்பட்டு வருகிறது. ரெடிமேடு சப்பாத்தி மற்றும் பூரி, ரெடி டு ஈட் இடியாப்பங்கள் என தேவையானவர்களுக்கு நேரிடையாகவே சென்று தேவையான அளவில் சப்ளை செய்து வருகிறார்கள்.

சுவையிலும், தரத்திலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் இவர்கள் செய்யும் உணவுகளுக்கு திருச்சியின் பல இடங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தனியார் துறை மேலாளராக இருந்த செந்தில்குமார், உணவுத்துறைக்குள் வந்தது எப்படி? கேள்விகளுடன் அவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது., மெக்கானிக்கல் என்ஜினீயர் முடித்துள்ள நான் ஒரு தனியார் நிறுவனத்தில் AGM ஆக பணியாற்றி வந்தேன்.

30 வருடங்கள் அனுபவமிருந்த நிலையில் வீட்டில் ஏற்பட்ட சிறு மாற்றத்தால் நெடுநாளைய விடுமுறை எடுக்க வேண்டிய சூழல். என்னுடைய மனைவியின் துறை தான் அட்சயா புட்ஸ், அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வீட்டிலேயே மசாலா செய்து விற்பனை செய்து வந்தார். இந்த தொழிலை இன்னும் கொஞ்சம் மெருகூட்டலாம் என வீட்டுமுறையில் ரெடி டு குக் சப்பாத்தி, பூரி மற்றும் ரெடி டு ஈட் இடியாப்பம் என ஆரம்பித்த்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக இதனை செய்து வருகின்றனர். திருச்சியை சுற்றி பல்வேறு இடங்களில் இவர்கள் கேட்டரிங் சேவையும் செய்து வருகின்றனர். பெரும்பாலும் சப்பாத்தி வகைகளை வேண்டுமென சொல்பவர்களுக்கு நேரிடையாக சென்று டெலிவரியும் செய்து வருகின்றார்.

ஒரு மணி நேரத்தில் 800 சப்பாத்திகள் வரை செய்ய முடியும் என்பதால், வேண்டுபவர்களுக்கு பிரெஷாக உடனே செய்து தருகிறோம்' என்கிறார். அட்சயா புட்ஷில் மசாலா மற்றும் சப்பாத்தி வகைகள் மட்டும் இல்லாமல், அப்பளம், இட்லி தோசை மாவு, செக்கு எண்ணெய்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision