நியூரோ ஒன் மருத்துவமனை சார்பாக காவல் துறையினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

நியூரோ ஒன் மருத்துவமனை சார்பாக காவல் துறையினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நியூரோன் மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை.

 திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமாங்கல்யம் திருமண மண்டபத்தில் இன்று 27/4/2025 காலை 10:30 மணி முதல் துவங்கி மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற்றது.இதில் 170 காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமை நியூரோன் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் விஜயகுமார் நியூரோ சர்ஜன் அவர்கள் மற்றும் பி ஆர் ஓ ரமேஷ் அவர்களும் இணைந்து நடத்திக் கொடுத்துள்ளனர்.

 மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் பட்சத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் காவல்துறையினர் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்முகாம்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் BEAST THE BOUNCERS சங்கம் சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் அவர்களை கண்களை பாதுகாத்துக் கொள்ள 25 குளிர் கண்ணாடிகள் திருச்சி சரக காவல் துணைத்தலைவர் டாக்டர் வருண் குமார் அவர்கள் தலைமையில் வழங்கினார்கள்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision