சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் 

சக்தி வாய்ந்த ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வரும் நிலையில், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நாளொன்றுக்கு மதிய வேளையில் சுமார் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு பகுதி மேற்கு வடக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தாமதம் ஆனதால் முதல்கட்டமாக வடக்கு மேற்கு தெற்கு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதை தொடர்ந்து ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்த கோபுரத்திற்கு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் சேகர்பாபு பக்தர்கள் அதிகமாக வரும் கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் வருகிற 17-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அதன்படி சமயபுரம் கோயிலில் வருகிற 17-ஆம் தேதி முதல் முழு நேர அன்னதான திட்டம் தொடங்குகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn