கோடைக்கால வெப்பத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்

நாடு முழுவதுமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கத்தால் பெரியவர்களைவிட, குழந்தைகளுக்குக் கூடுதலான பிரச்சினைகள் தோன்றும். அவற்றைத் தடுக்கவும் சமாளிக்கவும் சில வழிகள் :
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இளநீர், நுங்கு அதிகமாக கொடுக்கலாம்.
தர்பூசணி,திராட்சை, மாதுளை பழச்சாறுகளை கொடுக்கலாம்.கோடை காலத்தில் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
12 மணி முதல் 3மணி வரை அதிக வெயில் இருப்பதால் அதிகம் வெளியில் விளையாடுவதை தவிர்க்கலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது ..
காரமான உணவுகள்,குளிர்ந்ந நீரை தவிர்ப்பது சிறந்தது ..
முடிந்தவரை குழந்தைகளுக்கு ஏசி பயன்பாட்டை குறைக்கலாம் ஏசி பயண்படுத்தும் போது தாகம் ஏற்படுவது குறைவு எனவே குழந்தைகள் அதிகம் தண்ணீர் அருந்துவதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்
அதிகபடியான வியர்வையால் தோல் சார்ந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது முடிந்த வரை குழந்தைகளை இருமுறை குளிக்க வைக்கவேண்டும் ..
மாறிவரும் காலநிலை மாற்றங்களால் இனிவரும் நாட்களிலும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவேகோடைக்கால வெப்பத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision