SDPI கட்சி சார்பாக காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

SDPI கட்சி சார்பாக காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபர்களுக்கு  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 28 நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்"மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிக் கூட்டம்" தென்னூர் ஹை ரோடு பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மேற்கு தொகுதி செயலாளர் ரியாஸ் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட அமைப்பு செயலாளர் முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு பஹல்காம் தாக்குதலை கண்டித்து கண்டன உரையாற்றினார்.தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலாளர் Er. முகமது சித்திக், மாவட்ட துணைத் தலைவர் ரஹீம், மாவட்டச் செயலாளர்கள்  

மதர்.Y.ஜமால்,  

Er.சதாம், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (எ)பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜித், கவிஞர்.ந. 

சிராஜ்., 

SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, 

 வர்த்தக அணி மாவட்ட தலைவர் 

Dr.பக்ருதீன்,

WIM மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, 

மேற்கு தொகுதி இணைச் செயலாளர் தென்னூர்.நஃபீஸ்,

தென்னூர் கிளை தலைவர் உதுமான் அலி,

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் 

மாவட்ட, தொகுதி, கிளை, அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக திருவெறும்பூர் தொகுதி தலைவர் I.ஷேக் அவர்கள் நன்றி

கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision