தமிழக மாணவர்களை மீட்க விமானங்கள் தயாராக உள்ளது திருச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி

தமிழக மாணவர்களை மீட்க விமானங்கள் தயாராக உள்ளது திருச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் கோவில்களில் வழிபாடு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்... உக்ரைனில் மாட்டித் தவிக்கும் இந்திய மக்களை மீட்பதற்கு நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தான் வருகிறோம். உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அவர்களை சாலை மார்க்கமாக அருகிலுள்ள ருமேனியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இது தொடர்பாக ரஷ்யா, உக்ரேன் மற்றும் சுற்றியுள்ள நாட்டு அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறோம். ருமேனியாவில்  எல்லைப்பகுதியில் அவர்களது பாஸ்போர்ட்டை காண்பித்தால் உள்ளே விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ருமேனியாவில் இருந்து வெளிவருவதற்கு பல்வேறு விமானங்கள் தயாராக உள்ளது. அங்கிருந்து டெல்லி அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு எவ்வித கட்டணமின்றி அவர்களை இலவசமாக அழைத்து வரவே ஏற்பாடு செய்து வருகிறோம். விமான சேவையே தற்சமயம் இல்லையே என்று கூறுகிறார்கள். எப்படி டிக்கெட் ஒரு லட்ச ரூபாய் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுவார்கள். இந்திய தூதரகத்திலிருந்து நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தற்சமயம் தான் கொரானாவில் இருந்து விடுபட்டு வந்துள்ளோம். முழுவதுமாக விடுபட்ட பிறகு ரோடு ஷோ, சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுற்றுலாதுறை குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. துபாயில் இந்தியாவின் சுற்றுலாத்துறை குறித்த கண்காட்சி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது, நிரந்தரமாக அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சர்வதேச விமான சேவைகள் மீண்டும் துவங்கிய பிறகு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  உள்நாட்டு சுற்றுலா வளத்தையும், பயணிகள் எண்ணிக்கையும் பெருக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn