ஸ்டெர்லைட் இயக்க ரூ.5 லட்சம் லஞ்சம் - இயக்குநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கடந்த (12.12.2008) அப்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு அம்பிகாபதி அலுவலக தொலைபேசியில், அப்போதைய சென்னை தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் (தற்போதைய பதவிநிலை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை) இளங்கோவன் என்பவர் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் அவர், தூத்துக்குடி Sterlite நிறுவனத்தில் நடந்த விபத்து தொடர்பாக மூடப்பட்டிருக்கும்.
அந்த நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கு உத்தரவு இடுவதற்காக லஞ்சமாக ரூ. 5 லட்சம் இளங்கோவன் முதலில் கேட்டும் அதற்கு அட்வான்சாக 2 லட்சம் பெற்றுக் கொள்ளப்போகிறார் என்றும், மேற்படி இளங்கோவனுக்கு 2 லட்சம் லஞ்சம் அட்வான்சாக கொடுப்பதற்கு Sterlite நிறுவனத்தின் மேலாளர்கள் சற்குணன் மற்றும் ஜோசப் பிரீஸ் ஆகிய இருவரும் திருச்சி வந்து இரவு 10 மணிக்கு கொடுக்கப்போகிறார்கள்.
என்ற கிடைத்த தகவலின்பேரில், DSP அம்பிகாபதி அவரது உயரலுவலர்களின் அனுமதியின்பேரில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் எடுத்த நடவடிக்கையின் பேரில் மேற்படி இளங்கோவன், (முன்னாள் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை) என்பவர் 2 லட்சம் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி வழக்கானது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 15 வருடங்களாக நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கானது தற்போது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிவுற்று இன்று 13.10.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், எதிரி இளங்கோவன், முன்னாள் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை என்பவர் லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக,
ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000/-ம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டளையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.